Introduction:
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் யூடியூபில் எவ்வாறு நம் சேனல் ஆரம்பிப்பது மற்றும் அவற்றிற்கான விதிமுறைகள் என்ன என்று போன பதிவில் பார்த்தோம். ஆனால் என்னதான் வீடியோ அப்லோட் செய்தாலும் views வரமாட்டேன் என்று கூறுகிறீர்கள். வரவில்லை அவற்றை எப்படி அதிகரிப்பது என்று இந்த பதிவு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் முழுமையாக படிக்கவும் பிடித்திருந்தால் பாலோ செய்து கொள்ளவும்.
Editing Tips:
நீங்கள் வீடியோ ரெக்கார்டு செய்யும் பொழுது மிகவும் அமைதியாக இருந்து உங்களது வாய்ஸ் மிகவும் தெளிவாக இருக்குமாறு வீடியோ ரெக்கார்டிங் ஆடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளுங்கள். பிறகு எடிட்டிங் செய்வதற்கு வருவீர்கள் நீங்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் உங்களது எடிட்டிங்கை பொருத்தும் views அமையும். அது எப்படி என்று கேட்டீர்கள் என்றால் உங்களுடைய வீடியோ முதன்முதலாக யூடியூப்பில் பதிவேற்றம் செய்கிறீர்கள் ஒரு குறிப்பிட்ட நபருக்கு முதல் முறையாக கண்டிப்பாக பகிர வேண்டும், அவ்வாறு பகிரும் பொழுது உங்களது வீடியோக்களை பத்து நிமிடம் வீடியோவாக இருந்தால் குறைந்தது 5 நிமிடமாவது அவர்கள் பார்த்திருக்க வேண்டும் அப்படிப் பார்க்க நமது எடிட்டிங் மற்றும் நம்முடைய பேச்சுத்திறமை கண்டிப்பாக உதவியாக இருக்கும் அவர்கள் பார்த்தவுடனே வீடியோ நல்லா இருக்காது என்று முடிவு செய்து ஒரு நிமிடத்தில் அல்லது அதற்கு கீழேயும் பார்த்து விட்டு சென்று விட்டார்கள் என்றால் நீங்கள் பதிவேற்றம் செய்யும் தலைப்பில் வேறு நபர்களுக்கு உங்களது வீடியோவை யூடியூப் பரிந்துரை செய்யாது. யூட்யூபில் நம் பகிர்ந்து வரும் பார்வைகளை விட பரிந்துரை செய்யும் வீடியோக்களை நன்றாக views கொண்டுவரும். ஆகையால் நீங்கள் நன்றாக பேசி இருக்க வேண்டும் அது போக எடிட்டிங் செய்ய வேண்டும்
. எடிட்டிங் நன்றாக செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் முதலாக நீங்கள் தேவையில்லாமல் கூறியிருக்கும் வார்த்தைகள் மற்றும் திரும்பத் திரும்ப பயன்படுத்தி எரிச்சலடைய செய்யும் வார்த்தைகளை நீக்க வேண்டும் அது மட்டுமின்றி நீங்கள் பேசிவிட்டு இடையில் சிறிது நேரம் பேசாமல் இருந்து இருப்பீர்கள் அந்த இடம் தேவை இல்லை என்றால் கண்டிப்பாக நீக்கிவிடவும். கண்டிப்பாக தேவை இல்லாத இடங்களை நீக்குவதால் வீடியோவின் நிமிடங்கள் குறையும் வீடியோ பார்ப்பவர்களுக்கும் நல்ல விறுவிறுப்பை கூட்டி தரும் ஆகையால் எடிட்டிங்கில் இந்த மூன்று விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும் அது போக உங்களது வீடியோக்களை effects நீங்கள் எடிட்டிங் நன்றாக கற்றுக் கொள்வது நல்லது.
உங்களது வீடியோவில் WATER MARK இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
After Editing:
எடிட்டிங் வேலைகள் முடிந்துவிட்டது நீங்கள் எடிட்டிங் செய்யும் சாஃப்ட்வேர் எக்ஸ்போர்ட் செய்யும் பொழுது இந்த செட்டிங்கை மாற்றிக்கொள்ளுங்கள் அதாவது அதிக அளவு quality உள்ள ஆப்ஷன் ஆன குறைந்தது 1080p இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் நன்று அது போக உங்களிடம் இணையதளம் வேகம் அதிகமாக இருக்கிறது என்றால் தாராளமாக அதில் வீடியோ சைஸ் உடன் எக்ஸ்போர்ட் செய்யுங்கள் இல்லை என்றால், அவற்றின் bitrate என்ற செட்டிங் இருக்கும் அவற்றை ஓரளவு குறைத்துவிட்டு நீங்கள் எக்ஸ்போர்ட் செய்தீர்கள் என்றால் நல்ல தெளிவான குவாலிட்டியில் வீடியோ மற்றும் குறைந்தளவு mb உடன் வீடியோவும் நமக்கு கிடைக்கும்.
எக்ஸ்போர்ட் செய்யும் முன்பு உங்களது வீடியோவின் தலைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் அதாவது நான் யூடிபி பற்றி வீடியோ எடுக்கும் ஏனென்றால் அந்த நேம் உடன் நமது யூடியூப் சேனல் நேம் கடைசியில் இருக்கவேண்டும்
எடுத்துக்காட்டு How to Get More View In Youtube | How to Earn Money In Tamil | Tamil Studio
Thumbnail Editing:
Thumnail என்பது நமது வீடியோவில் என்ன கூற வருகிறோம் என்பதை தெளிவாக இவற்றில் இருக்க வேண்டும். அதாவது ஒரு புத்தகத்தின் அட்டைப் பகுதி போன்றுதான் வீடியோவின் Thumbnail இவை.
- உங்களது வீடியோ என்னவென்பதை Thumbnail கூறவேண்டும்
- அதிக எழுத்துகளை கொண்டிருக்கக் கூடாது
- உங்களுடைய Logo சிறிய அளவு தமிழில் இருப்பது நன்று
- உங்களது சேனலுக்கு என்று பிரத்யேகமாக இருப்பது நன்று பார்த்தவுடன் உங்களது சேனல் வீடியோ தான் என்று தெரியும் அளவிற்கு ரெகுலராக ஒரு color Theme பயன்படுத்துங்கள்.
- எடிட்டிங் செய்து முடித்த பின்பு நான் ஏற்கனவே வீடியோவுக்கு கூறியதைப் போன்று நல்ல HD குவாலிட்டி எக்ஸ்போர்ட் செய்துகொள்ளுங்கள்
- வீடியோவின் டைட்டிலை அந்த Thumbail name கண்டிப்பாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்
Upload Tips:
அப்லோட் செய்வதற்கு முன்பாக நீங்கள் உங்களது யூடியூப் செட்டிங்கில் Default Upload என்ற செட்டிங்கில் நீங்கள் ரெகுலராக பயன்படுத்தும் வார்த்தைகளை அவற்றில் மாற்றிவிட்டால் நீங்கள் ஒவ்வொரு முறையும் அப்லோட் செய்யும் பொழுது அந்த வார்த்தைகள் ஆட்டோமேட்டிக்காக வந்துவிடும் அதாவது நீங்கள் பயன்படுத்தும் copyright disclimar மற்றும் உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய இணையதள பக்கங்கள்உங்களது சேனல் பெயர் போன்ற பொதுவான செய்திகளை அவற்றில் வைத்துக் கொள்ளலாம்.
1. Title:
நீங்கள் Title பதிவிடும் பொழுது அவற்றில் கடைசியில் உங்களது சேனல் பெயர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கொடுக்கும் எழுத்துக்களும் முழுமையாக இடம் பெற்றிருக்க வேண்டும் டைட்டில்ஸ் கொடுக்க வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்களது வீடியோ topic யூடியூபில் search என்ற ஆப்ஷனில் டைப் செய்யும் பொழுது ஆட்டோமேட்டிக்காக கீழே நிறைய வாக்கியங்கள் Recomment செய்யும் அவற்றை ஒவ்வொன்றையும் காப்பி செய்து நீங்கள் டைட்டிலாக கொடுத்தால் VIEWS அதற்கு வாய்ப்பு உள்ளது.
2.Description:
அடுத்ததாக டிஸ்கிரிக்ஷன் இல் நீங்கள் டைட்டிலில் கொடுக்கப்பட்டவை காப்பி செய்து மூன்று முறை திரும்பத் திரும்ப வருவது போன்று செய்து கொள்ளுங்கள் இவை தொடர்ச்சியாக இருக்காமல் இடையில் அவற்றை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் வீடியோவில் என்ன கூறி இருக்கிறீர்கள் என்பதை முழுமையாக ஆங்கிலத்தில் டைப் செய்து இருக்க வேண்டும் அந்த டைப் செய்யும் பொழுது நீங்கள் யூட்யூபில் சர்ச்சு செய்தால் வரும் வார்த்தைகள் இடையில் அதிக அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்
பிறகு தற்போது யூடியூபில் ஒரு வசதி கொண்டு வந்துள்ளனர் அதாவது இந்த நிமிடத்தில் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்பதை நிமிடத்தில் குறிப்பிட்டு அவற்றுக்கான தலைப்பையும் அருகில் குறிப்பிடுங்கள் இவற்றினால் அதிகளவு கூகுளில் அதிக அளவு Views கொண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
அடுத்து தொடர்பு கொள்ள வேண்டிய இணையதள பக்கங்கள் இமெயில் முகவரிகளை கொடுக்கவேண்டும் இவற்றினால் உங்களுக்கு ஸ்பான்சர் செய்வதற்காக உங்களை தொடர்பு கொள்வதற்கும் எளிதாக இருக்கும்
உங்களது மொழியினை கடைசியாக தலைப்பு வைப்பது மிகவும் நன்று அதாவது in tamil என்று நான் அனைத்து வீடியோக்களும் வைத்திருப்பேன்
ஹஸ்டக் அதிகளவு பயன்படுத்துங்கள்.
3.Tag:
முதலில் உங்களது சேனல் பெயரை குறிப்பிடுங்கள்
இரண்டாவது நீங்கள் என்ன தலைப்பை கொண்டு இருக்கிறேன் அவற்றை தனித்தனியாக குறிப்பிடுங்கள். இவற்றுக்கு நான் ஏற்கனவே கூறி உள்ளதை போன்று யூடியூப் சர்ச் ஆப்ஷனை பயன்படுத்தலாம்
அல்லது நான் கீழே குறிப்பிட்டுள்ள இணையதளத்தையும் நீங்கள் பயன்படுத்தினால் நீங்கள் டைப் பண்ணுவதற்கு மிகவும் எளிதாகவும் அதிக வியூஸ் பெறுவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்
கடைசியாக உங்களது மொழி என்னவோ அவற்றை in tamil, in english போன்று பயன்படுத்துவது மிகவும் நன்று.